Saturday, July 14, 2012

தொட்டுதொட்டுபேசவரான்கண்ணன்-Thottuthottu pesavaran-kannan



தொட்டு தொட்டு பேசவரான் கண்ணன் 



பல்லவி 
தொட்டு தொட்டு பேசவரான் கண்ணன் 
அவன் துடுக்குதனத்தை அடக்கு வாரில்லை 

அனுபல்லவி 
பட்டி   மாடோட்டும் பாலகோபாலன் கட்டுக்கடங்காத கடல் அலை போல் துள்ளி (தொட்டு தொட்டு)

சரணம்
எட்டி நின்றாலும் இதயம் துடிக்குது, விட்டு சென்றாலும் கண்ணீர் வழியுது 
எட்டிரன்டடியோ ஏழை என் செய்வேன் என் செவி குளிர இன்னிசை ஊதினான் (தொட்டு தொட்டு)

கட்டித்தயிர் பால்வெண்ணை கலயத்தில் ஏந்தி கானவழியே 
நான் தனித்து போகையிலே 

கட்டிகரும்பே,  தேனே, கனியே என்றழைத்து கை வலை குலுங்க குறுநகை காட்டியே (தொட்டு தொட்டு) 

Pallavi: toTTu toTTu pEsa varAn avan tuDukkuttanattai aDakkuvAr illai
Anupallavi : paTTil mADOTTum bAlagOpalan kaTTuk-kaDangAda kaDal alai pOl tuLLI
Charanam: kaTTit-tayir pAl veNNai kalaiyattil Endi kAna vazhiyE nAn tanittu pOgaiyilE
kaTTi karumbE tEnE kaniyE enRazhaittu kai vaLai kulunga kuru nagai kATTiyE

No comments:

Post a Comment